தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த செங்கண் பசுவன்தலாவ் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மகன் சின்னன்னன் (வயது.42) வயது இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
தினமும் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு வந்ததால் கனவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சங்க கடன் செலுத்த பார்வதி பணம் கேட்டார், தராததால் கோபித்து கொண்டு சேலத்தில் உள்ள அம்மா வீட்டிற்க்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் சின்னன்னன் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார் நேற்று முன்தினம் மனைவியை வீட்டுக்கு அழைத்து வர சென்றவர் மனைவி வர மறுத்ததால் விரக்தியடைந்து திரும்பி வந்தவர் இரவு வீட்டு உத்திரத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)

