Type Here to Get Search Results !

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த குத்தல அள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி நீலமேகம்  என்பவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார்.  கரும்பு தோட்டம் அறுவடைக்கு தயராக இருந்த நிலையில் கரும்பு தோட்டத்தில் மின் கம்பி தாழ்வாக இருந்தது, பலத்த காற்று வீசியதால்  மின்கம்பி உராய்வு ஏற்பட்டு  மின் பொறி கரும்பின் மீது விழுந்ததால் கரும்புத் தோட்டம் திடீரென தீ பிடித்தது, உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்,  ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீ மளமளவென பரவி அருகில் இருந்த, மகேந்திரன், சகாதேவன் ஆகியோரது கரும்பு தோட்டத்திற்கு தீ பரவி எரிய ஆரம்பித்தது, 


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் நீலமேகம், மகேந்திரன், சகாதேவன் ஆகியோரது 5 ஏக்கர் கரும்பு தோட்டம்  முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies