தருமபுரி மாவட்டம், ஏரியூரைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எரியூர் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி. இங்கு பேருந்து நிலையம் இல்லாததால் இந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் பென்னாக ரம் சாலையில் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஏரியூர் பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் நீண்ட நாளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு தருமபுரி முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ. 30 லட்சமும், முந்தைய தமிழக அரசு சார்பில் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் 16 கடைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், கழிப்பிடம், பயணிகள் அமரும் இடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்ட பேருந்து நிலையம் அமைப்பதற்காக இப்பகுதியைச் சேர்ந்த குஞ்சி ரெட்டியார், துரைசாமி ரெட்டியார் ஆகியோர் அரசுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர்.
அரசுக்கு வழங்கிய நிலத்தைக் காட்டிலும் அதிகமான நிலம் கைய கப்படுத்தப்பட்டுள்ளதாக ஓராண்டுக்கு முன் நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அண்மையில் கூறப்பட்ட இந்த வழக்கின் உத்தரவில், பேருந்து நிலையத்திற்காக வழங்கப்பட்ட நிலத்திற்கு பதிலாக கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருப்பதால், அந்த நிலத்தின் உரிமையா ளர்களுக்கு இழப்பீட்டு தொகை அல்லது கையகப்படுத்தப்பட்ட இடத்துக்கு மாற்றாக இடம் வழங்க வேண்டும் என்றும், அது வரையிலும் பேருந்து நிலையத்தின் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக அரசுத் தரப் பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்ப டவில்லை என கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவால் ஏரியூர் பேருந்து நிலையத்தின் 90 சதவிதப் பணிகள் நிறைவுற்ற போதிலும் பேருந்து நிலையத்தின் பணியை மேற்கொண்டு தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து நிலையத்தின் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
.gif)

