Type Here to Get Search Results !

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தரம் உயர்த்தப்பட்ட குருதி வங்கியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தரம் உயர்த்தப்பட்ட குருதி வங்கியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று (06.04.2022) தொடங்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் இதுவரை இரத்த சேகரிப்பு மையமாக செயல்பட்டு வந்த இரத்த சேகரிப்பு மையம் தற்போது குருதி வங்கியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, இக்குருதி வங்கியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இக்குருதி வங்கியில் இன்று 20 கொடையாளர்கள் இரத்த தானம் வழங்கினார்கள். 

இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வழங்கினார்கள், இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் சென்டர், உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்கள்.

பின்னர், Clean Hospital Campaign நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற மாபெரும் பிரச்சார இயக்கத்தின் கீழ் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நம் / என் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.மலர்விழி வள்ளல், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு.எஸ்.கனிமொழி, உறைவிட மருத்துவர் மற்றும் குருதி வங்கி அலுவலர் மரு.ஜே.அருண்பிரசாத் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies