Type Here to Get Search Results !

தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை ஒட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

தமிழகத்தின் மிக சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல். ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை ஒட்டி இன்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். 

ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும் ஆயில் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் தொங்குபாலம் மேல் நின்று மெயின் அருவி கண்டு ரசித்தனர், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவர்பணி, சினி அருவி, உள்ளிட்ட அருவிகளை  கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும்  சுவையான மீன் சாப்பாடு உண்டு மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க ஒகேனக்கல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies