தர்மபுரி வாசகர் வட்டம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் தருமபுரி மிட் டவுன் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான அறிஞர்களை அறிதல் என்னும் தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முதல்நிலை நூலகர் இரா. மாதேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். வாசகர் வட்டத் தலைவர் சி. இராசசேகரன், தருமபுரி ரோட்டரி மிட் டவுன் தலைவர் சி. குமரன், செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மா. பழனி, அறிஞர்களை அறிதல் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
பள்ளி மாணவர்கள், நுலகர் பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிறைவாக பி. சரவணன் நூல் கட்டுனர் நன்றி உரையாற்றினார்.
.gif)

