Type Here to Get Search Results !

இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய சாலை வசதி இல்லாமல் காத்துக்கிடக்கும் அவலம்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமக்காள் வயது 65 இவருக்கு 3 மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடித்து தன் கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள் இந்த நிலையில் தன்னுடைய விவசாய நிலத்தில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது மகள்கள் 3 பேரும் தோட்ட வீட்டுக்குச் சென்று உடலை அடக்கம் செய்ய உறவினர்களும் ஊர் பொதுமக்களும் முற்பட்டபோது பக்கத்தை நிலத்தைச் சார்ந்த ராஜமாணிக்கம் எங்களது தோட்ட வழியில் பிணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது, இதனைத் தொடர்ந்து பிணத்தை எடுக்க வழி இல்லாமல் ராமக்காள் உடல் கடந்த 24 மணி நேரமாக காத்துக் கிடக்கிறது, இதை அறிந்த காவல்துறையினர் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதில் சிஎம் ஆர் முருகன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விசிக வார்டு கவுன்சிலர் சின்ன வேட்டியும் இதில் கலந்து கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies