Type Here to Get Search Results !

கூத்தப்பாடி அருள்மிகு தர்மராசர் திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி குளத்தங்கரையில் எழுந்தருளியுள்ள கூத்தப்பாடி, கே. குள்ளாத்திரம்பட்டி, பொச்சாரம்பட்டி, அளேபுரம், கே. அக்ரஹாரம், கீழூர், மடம், சின்னப்பநல்லூர் ஆகிய ஏழு  கிராமங்களுக்கு சொந்தமான அருள்மிகு தர்மராசர் திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக  விழாவினை அடுத்து கூத்தப்பாடியில் தர்மராசர் மற்றும் திரௌபதி அம்மன், அர்ஜுனன், பீமன் நகுலன் சகாதேவன், போன்ற  பதினைந்துக்கும் மேற்பட்ட  சிலைகள் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன.

கும்பாபிஷேக விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குளத்தங்கரை முதல் கூத்தப்பாடி வரை தார் சாலை அமைத்து தருமாறு முனியப்பன் ஐயா மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது, பின்னர் இதுகுறித்து அவர் கூறியது உடனடியாக இந்த சாலை அமைத்துத் தரப்படும் என உறுதியளித்தார் இந்நிகழ்வில் வன்னியர்  சங்க மாநில துணைத்தலைவர் பாடி செல்வம், பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், கூத்தப்பாடி ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா  அருள்மொழி, மற்றும் ஒன்றிய செயலாளர் கேபி முருகன் மாவட்டத் தலைவர் செல்வகுமார் மற்றும் கோயில் பூசாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர், தர்மராசர் கோவில் விழாக்குழுவினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஏழு ஊர் கவுண்டர்களும் மற்றும்  கோயில் பூசாரிகள் என பெரும் திரளானோர் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies