தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கோணம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோழிக் கடைகாரரின் 16 வயது மகள் மாரண்டஅள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார், தந்தை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே எட்டிகுட்டை என்ற ஊரில் கோழிக் கடையில் வேலை செய்து வருகிறார், அதனால் மாணவி கோணம்பட்டியில் உள்ள தாத்தா பாட்டியிடம் தங்கி படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 22) மற்றும் அவரது நண்பர்களான மூர்த்தி (வயது 20), சேகர் (வயது 27), சந்தோஷ் (வயது 22) மனிகண்டன் (வயது 32) ஆகியோர் சேர்ந்து நேற்றிரவு குடிபோதையில் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தியும், ஆபாச வார்த்தைகளால் பேசி மாணவியை கட்டாய காதல் செய்ய வற்புறுத்தினர்.
இது சம்பந்தமாக புகாரின் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர், தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
.gif)

