பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சி ஒட்டனூர் கிராமத்தில் புதிய நூலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் G.K.மணி அவர்கள் பங்கேற்று நூலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில் கிராமத்தில் உள்ள ஏழை எளிய குழந்தைகள் பயன் பெறும் வகையில் இந்த நூலகம் இருக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவினை மேம்படுத்துவதற்கு இந்த நூலகம் முக்கியமானதாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். பின்னர் அதற்கு ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார்.
இந்நிகழ்வில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பாடி செல்வம், மாவட்ட கவுன்சிலர் சீ.வி. மாது, பென்னாகரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் K.P. முருகன் ராசா உலகநாதன், ஜெகதீசன் மற்றும் பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி ,மந்திரி படையாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி மாணிக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள், என இந்த நூலகத் திறப்பு விழாவில் பலரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் அம்மாசி அவர்கள் நன்றி கூறினார்..gif)

