தர்மபுரி மாவட்டம் அரூரில் சேலம் பைபாஸ் சாலையில் தமிழ்களஞ்சியம் இயற்கை உழவர்கள் சங்கம் இணைந்து நடத்திய நம்ம ஊர் மரபு சந்தை இயற்கை விவசாய விளை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் இயற்கை முறையில் விளை விளைவிக்கப்பட்ட பாரம்பரிய 30 வகை அரிசிகள், சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசியால் செய்யப்பட்ட தின்பண்டங்கள், ஆர்கானிக் காய்கறிகள், நாட்டு சக்கரை செக்கு எண்ணெய் தேன் மற்றும் தேன் சார்ந்த பொருட்கள், நாட்டு மாட்டு பால் மற்றும் நெய் இயற்கை கீரைகள் இயற்க்கை உயிர் உரங்கள் இயற்கை அழகு சாதன பொருட்கள், இயற்கை கிழங்கு வகைகள், நாட்டுக் கோழி முட்டைகள் ,இயற்கை மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருட்கள் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில் அரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசிகள் மற்றும் தேன் மற்றும் தின்பண்ட வகை கள் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கி சென்றனர்.