Type Here to Get Search Results !

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சியர்/பெருந்தலைவர், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையில் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ-13000/- என்ற ஒப்பந்த ஊதியத்தில் கீழ்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் ஏற்கனவே மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் குறைந்தது 5 முதல் 10 வருடங்கள் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை திட்ட அலுவலர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், தரைதளம் (Ground Floor) தருமபுரி-5 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமாகவோ (13.04.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்) விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies