இந்த விழா கடந்த 4ம் தேதி கணபதி பூஜையுடன்தொடங்கியது. இன்று அதிகாலை கலச ஆராதனை, இரண்டாம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், பூர்ணாஹநிதி நடந்தது.
இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை அய்யர்கள் மற்றும் 63 வீட்டு பங்காளிகள், ஊர் கவுண்டர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயிலில் படுத்த நிலையில் உள்ள ஸ்ரீபெரியாண்டிச்சி அம்மனுக்கு தலை முதல் பாதம் வரை புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீபெரியாண்டிச்சி அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள். மற்றும் பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது, அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
.gif)


