தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் 30/04/22 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர், பென்னாகரம் வட்டாட்சியர், பென்னாகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், இருபால் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா இனிதே நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வட்டாட்சியர் தலைமையில் பள்ளியை முன்னேற்றம் செய்திட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.