தருமபுரி மாவட்டத்தில் கல்விதுறை சார்பில், வட்டார கல்வி அலுவலகம் 8 உள்ளது. இதில் 18 வட்டார கல்வி அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். வட்டார கல்வி அலுவலர்கள் பணிகள் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகள்.
இதே போல் தருமபுரி ஒன்றியத்தில் உள்ள 300 துவக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளை கண்காணிக்க ஜீவா என்கிற வட்டார கல்வி அலுவலர் உள்ளார். இவர் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும் போது, தலைமை ஆசிரியைகளையும், ஆசிரியர்களையும் ஒருமையில் பேசுவது தரகுறைவாக பேசி வந்தார். இது குறித்து ஆசிரியர்கள் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவரிடம் புகரா் மனு அளித்துள்ளனர்.
ஆனால் வட்டார கல்வி அலுவலர் மீது கல்விதுறை அதிகாரி் எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து இன்று ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வட்டார கல்வி அலுவரை நேரில் சந்தித்து ஏன் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுகின்றனர் என கேள்ளவி கேட்டனர். அப்போது வட்டார கல்வி அலுவலர் ஜீவாவிற்கும் ஆசிரியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர் வெளியே வந்த ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது.
வட்டார கல்வி அலுவலர் ஜீவா பள்ளிகளுக்கு செல்லும் போது ஆசிரியைகளை ஒருமையில் பேசுவதும், தககாத வார்த்தையில் திட்டுவதும் லஞ்சாம் கேட்பதும் வாடிக்கையாக உள்ளது. இவர் மீது கல்விதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில் என்றால், ஆசிரியர்கள் கூட்டமை சார்பில் விரைவில் ஆர்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.