நெருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நாகமரை ஊரட்சி மன்றத்தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சி. தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தின் பார்வையாளராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மா. பழனி கலந்துக்கொண்டு பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்வதன் நோக்கம் பள்ளியின் மீது பெற்றோர்கள் ஈடுபாட்டுடன் இருந்து மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படுவது பற்றியும் பேசினார்.
கூட்டத்தில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 20 பேர் கொண்டபள்ளி மேலாண்மைக் உருவாக்கப்பட்டது. தலைவராக திவ்யா துணைத் தலைவராக செவ்வந்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர், பள்ளி ஆசிரியர்கள் கலைச்செல்வி, ரவி, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.