தருமபுாி மாவட்ட அதிமுகழக செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதனையடுத்து மாண்புமிகு அதிமுக இணை செயலாளரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளா் எதிா்க்கட்சி துணை தலைவா் ஒ.பன்னீா்செல்வத்தை நோில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றாா்.
உடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினா் கோவிந்தசாமி, அரூா் சட்டமன்ற உறுப்பினா் சம்பத்குமாா், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவா் பொன்னுவேல் உடனிருந்தனா்.