பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை - பென்னாகரம் வட்டாரம் சார்பாக அரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கி குழு மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நாகதாசம்பட்டி - க்கு உட்பட்ட மாமரத்துப் பள்ளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி -ல் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
இந்த இரத்த தான முகாமினை பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் கல்லூரி முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்கள் மேலும் இம்முகாமில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி இரத்த வங்கி மருத்துவ அலுவலர், நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வக நுட்புணர்கள் , கலந்து கொண்டனர். (65 Units இரத்தம் பெறப்பட்டது) இறுதியில் இரத்ததானம் செய்த மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.