பெரியார் பல்கலைக்கழகம் முதுநிலை விரிவாக்க மையம் தர்மபுரி "புவி அமைப்பியல் துறை" நடத்தும் "உலக புவி தினம்" நாளை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகன சுந்தரம் அவர்கள் தலைமை உரையாற்றினார் முனைவர் நந்தகுமார் அவர்கள் முனைவர் சஞ்சய் காந்தி அவர்கள் முனைவர் வித்யாசாகர் மற்றும் திரு அருண்பாரதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் முனைவர் பி கார்த்திகேயன் மேலாண்மை துறை அவர்கள் "புவியை மீட்டெடுப்போம்" என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார் முனைவர் மா. செல்வபண்டியன் இயற்பியல் துறை அவர்கள் (E=Mc Square) என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள்.
நன்றியுரை செல்வி. பூவிழி முதலாம் ஆண்டு புவியமைப்பியல் துறை பெரியார் பல்கலைக்கழகம் முதுநிலை விரிவாக்க மையம் தருமபுரி. இந்நிகழ்வில் மாணவர்கள் சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டார்கள்.