விழாவிற்கு கல்லூரி தாளாளர் கே. சதாசிவம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா. விஜய் முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசிய நூலகர் சி.சரவணன், "மாணவர்கள் பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தங்கள் அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்; இதற்கு மாணவர்கள் அருகாமையில் உள்ள நூலகங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் பாவலர் கோ. மலர்வண்ணன், திருவள்ளூர் பொத்தக இல்லம் நிறுவனர் நெடுமிடல், பத்திரிக்கையாளர் பொம்மிடி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி நிர்வாக அலுவலர் நா.ஆம்ஸ்ட்ராங் வரவேற்புரை வழங்கினார். முடிவில் விரிவுரையாளர் ப.ரமணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஐயப்பா கல்லூரி மாணவர்கள் 50 பேர், கிரீன் பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 50 பேர் கடத்தூர் கிளை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். தாளாளர் கே. சதாசிவம், மருத்துவர் ஐஸ்வர்யா சரத்சுந்தர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம.கௌரி சங்கர், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ஆர். அப்பாவு ஆகியோர் நூலக புரவலர்களாக இணைந்து கொண்டனர்.