Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனூர் கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனூர் கிராமத்தில்  நீண்டகாலமாக நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வந்தன. இதனால் பெரிதும்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்புக்களை அகற்றகோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவில் பேரில் இந்த ஆக்கிரமிப்புகளை உதவி கோட்ட  பொறியாளர் விஜய் முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன. இதில் இளநிலை பொறியாளர் தமிழரசு, சாலை ஆய்வாளர் அண்னபூரணி, மற்றும் சாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதையும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். மேலும் இதற்கு மேல் நெடுஞ் சாலைகளை ஆக்கிரமித்து வீடுகள்  மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை செய்துள்ளனர். 
சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையை விரிவு செய்துள்ளதால்  போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies