பெரியார் பல்கலைக்கழகம் முதுநிலை விரிவாக்க மையத்தில் "தொழில்முனைவோர் மையம்"சார்பாக இரண்டு நாள் "சிறப்பு கருத்தரங்கு" நடைபெற்றது, முதல் நாள் கருத்தரங்கில் மகேஸ்வரன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தர்மபுரி மற்றும் திரு சரவணன் கடகத்தூர் சிப்காட் மையம் தருமபுரி அவர்கள் திருமதி வள்ளியம்மாள் மேலாளர் சிட்கோ தொழிற்பேட்டை தர்மபுரி திரு சிட்டிபாபு மேலாளர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியம் மற்றும் மேம்பாட்டு கழகம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்வில் முன்னதாக முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமையேற்று நிகழ்வை நடத்தினார் தொழில் முனைவோர் மையம் தலைவர் முனைவர் பி கார்த்திகேயன் மேலாண்மைத் துறை தலைவர் பொறுப்பு முனைவர் ஆர் டி சுரேஷ் அவர்கள் முனைவர் தஸ்னிம் முனைவர் விஜயகுமார் அவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்கத்தில் உள்ள 8 துறைகளிலும் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
.gif)

