தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மூங்கப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கொண்டாடுவது வழக்கம். இத்திருவிழாவானது கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார், முன்னதாக விநாயகர், கொல்லாபுரி அம்மனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.
இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு தட்டுவரிசை எடுத்தும், பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும் அம்மனுக்கு ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
.gif)


