தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர்கள் மதுமிதா, நர்மதா, மௌனிகா, காவியா, கீர்த்தனா, கௌசல்யா ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர்.
பயிற்சியின் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சீரியம்பட்டி கிராமத்தில் உள்ள சேகர் என்ற விவசாயிக்கு சொந்தமான தக்காளி நிலத்தில் தக்காளி சாகுபடியில் உள்ள தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இதில் தக்காளி நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு, 1 முதல் 1.5 மீட்டர் உயரமுள்ள தண்டுகளுடன் செடிகளை அடுக்கி வைக்க( ஸ்டேக்கிங்) செயல் முறை பயிற்சி அளித்தனர், மேலும் அவற்றின் முக்கியத்துவம், நன்மைகள் பற்றி விளக்கினர், இப்பயிற்சியில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
.gif)

