தருமபுரி இரயில் நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் சார்பில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி வெங்கடேஸ்வரன் (தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பின்னர் அவர் பேசியது கிடப்பில் உள்ள தருமபுரி மொரப்பூர் தொடர்வண்டி பாதை திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் மற்றும் அவற்றுக்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கூறினார். பின்னர் மத்திய அரசினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். செந்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுசாமி, பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சாந்த மூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பாடி செல்வம், வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், பாமக அமைப்பு செயலாளர் சண்முகம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு பெருந்தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் முருகசாமி, சத்தியமூர்த்தி, மாவட்ட தலைவர் செல்வகுமார், இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், பாமக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
.gif)

