Type Here to Get Search Results !

உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை மாதம் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க தர்மபுரி மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட நான்காவது மாநாடு பென்னாகரத்தில் நடைபெற்றது முன்னதாக கால்நடை மருத்துவமனை அருகில் இருந்து புறப்பட்ட பேரணி பெண்ணாகரம் பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கேஜி கருவூரான் தலைமை வகித்தார் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் மாநில தலைவர் ஜான்சிராணி மாநில பொருளாளர் சக்கரவர்த்தி மாநில துணைத்தலைவர் திருப்பதி மாநில செயலாளர் ஜீவா ஜனநாயக மாதர் சங்கத்தில் மாவட்ட செயலாளர்  கிரிஷமேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி பெண்ணாகரம் பேரூராட்சி துணை தலைவர் வள்ளியம்மாள் போன் ராஜ் பேரூராட்சி கவுன்சிலர் பவுண்டேசன் ஒன்றிய குழு உறுப்பினர் சக்கரை வேல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்ணாகரம் பகுதி செயலாளர் ரவி பெண்ணாகரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் உதவி தொகை 5,000 வழங்க வேண்டும், உயர்கல்விக்கு சலுகை வழங்க வேண்டும் தனியார் துறையில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies