Type Here to Get Search Results !

கூத்தபாடி தர்மராஜா கோவிலுக்கு காவேரியிலிருந்து புனித நீர் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில் அருள்மிகு தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றது. பஞ்சபாண்டவர்களான தர்மராஜா, திரெளபதி, அர்ஜுனன்,பீமன்,  சகாதேவன், நகுலன், கிருஷ்ணன் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்களை மையமாகக்கொண்டு இக்கோயில் உள்ளது.  இக்கோவிலை மையமாக கொண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக எம்மனசு தங்கம் படம் எடுக்கப்பட்டது. இக் கோயிலின் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. 

இதையொட்டி, இரண்டாம் நாளான இன்று  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்து பென்னாகரம் விநாயகர் கோயில் அருகில் இருந்து கூத்தப்பாடி, மடம், கே.அக்ராகரம், அளேபுரம், குள்ளாத்திரம்பட்டி, பொச்சாரம்பட்டி, சின்னப்பநல்லூர் உள்ளிட்ட ஏழு ஊரை கிராம மக்கள் ஒன்றிணைந்து காவிரி புனித நீர் மட்டும் முளைப்பாரி எடுத்து வந்தனர். 

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என இருபாலரும்  வாணவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். 

கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஏழூர் கட்டாடமணி  கவுண்டர் ஏழு ஊர் கவுண்டர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிகழ்வில் சுமார் 3000 -க்கும்           மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies