புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீசார், விரைந்து செயல்பட்டு, மோசடி பரிவர்த்தனையை உடனடியாக தடுத்து நிறுத்தி, ரூ. 48,474 / - பணத்தை மீட்டு தர்மபுரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.கலைச்செல்வன் ஐபிஎஸ் அவர்கள் மனுதாரரன அ.அன்பழகனிடம் ஒப்படைத்தார். அத்தகைய பணமோசடி புகார்களுக்கு உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 ஐத் தொடர்பு கொள்ளவும், மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யவும் அவர்களிடம் கூறப்பட்டது.
உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை அணுக வரும் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளையும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும், ATM PIN No, mPIN, Card Expiry details, CVV No, Debit Card No, Credit Card No, OTP, Net Banking User Name, Net Banking Password உங்கள் செல்போன் விவரங்களைச் சொல்லாதீர்கள். மற்றும் உங்கள் KYC / PAN / AADAR ஐ அப்டேட் செய்யச் சொல்லி, மற்றும் கோடிக்கணக்கில் பரிசுத் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்த விலையில் அதிக கடன் தருவதாகவும் எஸ்எம்எஸ், அழைப்பு, மின்னஞ்சல், வாட்ஸ்அப் செய்தி மற்றும் இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
.gif)

