தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு அவரின் 131 வது பிறந்தநாளான இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பென்னாகரம் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பென்னாகரம் ஒன்றிய செயலாளர் குண்டு சரவணன் தலைமை தாங்கி சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியாரிய அம்பேத்கரிய பகுத்தறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் கட்சி நிர்வாகிகள் கி. பிரகாஷ், ஆட்டோ நாகராஜ், சர்தார், ஹரி, சந்திரன், ரங்கராஜன், சிவசங்கர் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.gif)

