Type Here to Get Search Results !

மொரப்பூரில் விசிக சார்பில் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் விழா.

மொரப்பூர் சந்தைமேடு பேருந்து நிலையம் பகுதியில் விசிக சார்பில்  அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் விழா  அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழக அரசு சட்டப் பேரவையில் அண்ணல் அம்பேத்கரின் 131 வது  பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாட அறிவிப்பு செய்துள்ள நிலையில் இன்று தருமபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தமேடு பேருந்து நிலையம் அருகில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்  சார்பில் ஏப்ரல் 14 நாளான இன்று  தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மொரப்பூர் ஊராட்சி மன்ற தலைவி  உமாராணி உலகநாதன் கலந்து கொண்டு  அம்பேத்கரின்  திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர். வெங்கடாச்சலம் வீரவேல் ஜோதி  ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்நிகழ்ச்சியினை விசிக மொரப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திருலோகன் அவர்கள் சிறப்பு ஒருங்கிணைப்பு செய்து இருந்தார்.

இதில் கவிதா போஸ்,தீர்த்தான், சுகாசினி, வேடியப்பன்,ஜேஎஸ்.ஜெயசாந்த்,மாது,சின்னதம்பி,இராஜ்குமார், தெய்வம், விசிக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies