பென்னாகரத்தை அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் மா.பழனி பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்வதன் நோக்கம் நம் பள்ளி நம் பெருமை என்பதை இலக்காகக் கொண்டு அரசு அரசுப்பள்ளிகளின் தரம் மேம்பாடு சிறப்படைய பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்து பள்ளியின் வளர்ச்சியில் முன்னேற்றம் காண அரசு மேற்கொண்டிருக்கும் செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார்.
பள்ளி மேலாண்மை குழு 20 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது, பள்ளி மேலாண்மை குழுவின் தலைவராக திருமதி மாரதி, துணைத் தலைவராக திருமதி ராஜேஸ்வரி, உள்ளிட்ட 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.