தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் 15-வார்டுகளுக்கான பேரூர் நகர்புற உட்கட்சி கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது, இதில் கிளை செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள், மேலவை பிரதிநிதி, அவைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் திமுக தொண்டர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர் மன்னார் குடி மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்க பாரதி, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், துணைத்தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கோபால், இளைஞரணி அமைப்பாளர் ஹரிபிரசாத், யதிந்தர், பாலக்கோடு வடக்கு அணி ஒன்றிய அமைப்பாளர் ராஜா , வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் கழக உடன்பிறப்புகள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.