இயற்கையில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பிற்கும் இயற்கையே அதற்கான மருந்தையும் வழங்கும் என்பது இயற்கை விதி, கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க சிறந்த இயற்கை மருந்தாக நுங்கு விளங்குகிறது.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் சாலையோரங்களில் பனைநுங்கு வியாபாரிகள் நுங்கு விற்பனை செய்து வருகின்றனர், இப்பகுதியில் பனை நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது, பனை நுங்கு சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறைவது மட்டுமின்றி, வயிற்று வலி, வயிற்று போக்கு, பெண்களுக்கு ஏற்படும் உதிரபோக்கு, வியர்வை கொப்பளங்கள் உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
மேலும் கர்பிணிகள் பனை நுங்கு சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தையின் எடை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும் இளநீர் போன்று சுவையாகவும் உள்ளது, இத்தகைய பல அரிய மருத்துவ குணங்கள் கொண்ட பனை நுங்கு கோடை காலத்தில் மட்டுமே கிடைப்பாதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.
நுங்கு வியபாரிகள் 10ரூபாய்க்கு 2நுங்கு என விற்பனை செய்து வருகின்றனர், தற்போது ஆரம்பித்து கோடைகாலம் முடியும் வரை அதாவது ஜூன் மாதம் வரை நுங்கு கிடைக்கும் என பனை நுங்கு வியபாரிகள் தெரிவித்தார்.