Type Here to Get Search Results !

விவசாயி குறைதீர்க்கும் சேவை மையம் குறித்த விளக்கம்; திருச்சி தோட்டக்கலை மாணவிகள் வழங்கினர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர்கள் மதுமிதா, நர்மதா, மௌனிகா, காவியா, கீர்த்தனா, கௌசல்யா ஆகியோர் ஊரக  தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர். 

இந்த பயிற்சியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயி குறைதீர்க்கும் சேவை மையம் (கிசான் அழைப்பு மையம்) குறித்து விளக்கமளித்தனர். இதில், கிசான் அழைப்பு மையம் எப்போது தொடங்கப்பட்டது, எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது மற்றும் அதன் இலவச தொலைபேசி எண் (1800-180-1551) ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

கூடுதலாக, விவசாயிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு உள்ளூர் மொழியில் உடனடியாகப் பதிலளிப்பதாகும். நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் போக்குவரத்தைக் கையாள எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அழைப்பு மையங்கள் உள்ளன. விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகள் தொடர்பான கேள்விகள் இந்த அழைப்பு மையங்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன என கிசான் அழைப்பு மையத்தின் நன்மைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை மாணவிகள் விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies