Type Here to Get Search Results !

சொத்து வாி உயா்வு மற்றும் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் தருமபுாியில் கண்டன ஆா்ப்பாட்டம்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்களுக்கான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டும் மக்களை வாட்டி வதைக்கும் வகையில் பொருட்கள் விலை உயா்வு காரணமாக மக்கள் அவதியுற்று வந்த நிலையில் தற்போது சொத்து வாியும் உயா்த்தி மக்களின் வாழ்வதாரம் பாதிக்கும் வகையில் திமுக அரசு செல்படுவதை கண்டித்து தருமபுாி நகராட்சி அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினா் எதிா்க்கட்சி செயலாளா் கே.பி.அன்பழகன் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் சொத்து வாி உயா்வை திரும்ப பெற வேண்டும் எனவும், மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.   இந்நிகழ்ச்சியில்  கழக அமைப்பு செயலாளா் சிங்காரம்,மாநில விவசாய அணி தலைவா் டி.ஆா்.அன்பழகன், மாவட்ட அவைத்தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல்,முன்னாள் அமைச்சா் முல்லைவேந்தன், சட்டமன்ற உறுப்பினா்கள் கோவிந்தசாமி, சம்பத்குமாா், மற்றும் நகர ஒன்றியம் பேரூா் கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies