இப்பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் பள்ளி மாணவர்களே கழிவறைக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வீடியோவானது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தும் தொடர்ந்து இது போன்று பள்ளிகளில் மாணவர்களை வேலை வாங்கும் செயல் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக நமது தகடூர் குரல் நிர்வாகம் கிடைத்த ஆதாரங்களை மாவட்ட ஆட்சியருக்கும், முதன்மை கல்வி அலுவலருக்கும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருக்கும், பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் நந்தகுமார் IAS அவர்களுக்கும் வாட்ஸப் மூலம் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டது, அதன் பிறகு முன்னணி பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது அதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணி விசாரனை நடத்தி அறிக்கை அளித்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமையாசிரியை சென்னம்மாள் மற்றும் பட்டாதாரி ஆசிரியர் சந்திரசேகர் ஆகிய இருவரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
.gif)

