Type Here to Get Search Results !

டூ வீலர் - சைக்கிள் மோதி பள்ளி ஆசிரியை பலி.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் கோமதி (வயது.40) இவர் கம்பைநல்லூர் அருகே அமராய் நகரில் குடியிருந்து வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல தனது ஸ்கூட்டி வாகனத்தில் கம்பைநல்லூரிலிருந்து காரிமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார், காரிமங்கலம் அருகே மன்னன் கொட்டாய் என்ற இடத்தில் வரும் போது  சிறுவன் சைக்கிளில் குறுக்கே வந்ததால் சைக்கிள் மீது மோதி கீழே விழுந்ததில் கோமதியின் தலையின் பின்புறம் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், பள்ளி ஆசிரியை சைக்கிளில் மோதி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies