பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட 33 பள்ளிகளில் தோ்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேனா வழங்கி வாழ்த்து தொிவித்தாா்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வருடம் வருடம் 10ம் வகுப்பு மற்றும் 11,12ம் வகுப்பு மாணவா்களுக்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் சட்டமன்ற எதிர்கட்சி செயலாளர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் பேனா வழங்கி தோ்வில் தோ்ச்சி பெற வாழ்த்து தொிவிப்பாா்.
இதேபோல் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 33 அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இந்த ஆண்டு தோ்வு எழுதும் 9862 மாணவ மாணவிகளுக்கு அரசு பொது தேர்வு எழுத பேனா வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு ஒன்றிய தலைவா் பொன்னுவேல், பாலக்கோடு காாிமங்கலம் ஒன்றிய செயலாளா்கள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.