தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 500 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் 25க்கும் மேற்பட்ட நீதிபதிகளும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணியின் பொது பணிசுமை காரணமாக அதிக மனஅழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தியன் வங்கி மற்றும் விநாயகா மிஷன் மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை, சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி திலகம், மாவட்ட கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி மோனிகா உள்ளிட்ட 13 நீதிபதிகளும் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் தங்களது உடல் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்துகொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களும் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனையில் கலந்து கொண்டனர். பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு அம்முகாமிலிருந்த மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
.gif)

