அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கழிப்பறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செப்டிக் டேங்கில் சேருகிறது. இதிலிருந்து பல ஆண்டுகளாக கழிவுகள் வெளியேற்றப்படாததால் செப்டிக் டேங்க் நிரம்பி வழிந்தோடுவதுடன், நடைபாதை மற்றும் அலுவலக வளாகம் முன் தேங்கியுள்ளது.
இதனால், ஒரு பகுதியில் உள்ள நுழைவாயில் கதவு பூட்டியே உள்ளதுடன், அலுவலக வளாகத்தில் சுகாதாரகேடு நிலவுகிறது. துர்நாற்றம் தாங்க முடியாமல் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அவதியடைகின்றனர். மேலும், பல மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
எனவே, செப்டிக் டேங்க் கழிவுகளை பாதுகாப்புடன் வெளியேற்றவும், தொடர்ந்து பராமரிக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

