ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கபாடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர், இளந்தென்றல் கபாடி குழுவினர் மூலமாக மாநில அளவில் கபாடி நடத்தினர் . தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட கல்லூரி கபாடி குழு மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தருமபுரி அடுத்துள்ள நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் அருண்குமார், கெளதம், மேகநாதன், சூரியா, இனிப்பிள்ளை, தமிழ்செல்வன், மணிகண்டன், சந்துரு, நந்தகுமார், சுகுமார் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்.
வெற்றிப் பெற்ற மாணவர்களை மருதம் நெல்லின் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த், கல்லூரி முதல்வர் சா.எழிலன், துணை முதல்வர்கள் முனைவர் சி.காமராஜ், முனைவர் அ.இம்தியாஸ், முனைவர் சி.தமிழரசு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஆர்.சி.கார்த்திக், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
.gif)

