Type Here to Get Search Results !

அரூரில் அதிக எடை பளு தூக்கம் கிரீன் வாகனம் திருவிக நகர் அருகே உள்ள இரண்டு கடைகளுக்குள் உள்ளே நுழைந்தது.

தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிக நகர் அருகே அரூர் சேலம் பிரதான சாலையில் KGP பீரோ ஒர்க்ஸ் சாப்  மற்றும் அதன் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்க்குள் அதிக எடை பளு தூக்கும் கிரேன்  வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே நுழைந்தது. இதில் ஒர்க்க்ஷாப்பில் வேலை செய்தவர்கள் மற்றும் அருகாமையில் இருந்த நபர்கள் நூலிழையில் உயிர் தப்பினார். ஆனால் அங்கே நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனம் சேதம் ஏற்பட்டுள்ளது. 

தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி கிரேன் ஓட்டுநரை கொண்டு இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேனை வெளியில் எடுத்தனர், இதுபற்றி அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தபோது. இந்த வாகனம் நான்கு வழி சாலை போடுவதற்காக பயன்படுத்தப்படும் வாகனம் என்றும், இந்த வாகனம் வேலையை முடித்துவிட்டு வரும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறினார். 

மேலும் இந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் அதிகப்படியான மது போதையில் இருந்ததாகவும் இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர், மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies