Type Here to Get Search Results !

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஓசூர் வீட்டு வசதி பிரிவில் வீடு பெற வரும் 08ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஓசூர் வீட்டு வசதி பிரிவு சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் முகாம் ஒசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் 5 நாட்கள் நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. திவ்யதர்சினி இஆப அவர்கள் தகவல். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. திவ்யதர்சினி இஆப அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவு சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு 04.04.2022 திங்கட்கிழமை முதல் 08.04.2022 வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் முகாம் ஒசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள் விற்பனை பத்திரம் வழங்கும் இச்சிற்ப்பு முகாமில் உரிய அனைத்து ஆவணங்களுடன், கலந்துகொண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விதிமுறைகளை பின்பற்றி ஒதுக்கீடுதாரர்கள் விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. திவ்யதர்சினி இஆப அவர்கள் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies