தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
இதில் அரூர் எஸ்.ஐ கெய்க்வாட் மற்றும் போலீசார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என்பது குறித்து விளக்கியதுடன், பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்து படியில் முழு கவனம் செலுத்தவேண்டும் என அறிவுரை வழங்கினார் நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர் முருகேசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.