Type Here to Get Search Results !

ஏரியூர் ஸ்ரீ திம்மராய பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா; ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஏரியூரில் அமைந்துள்ள ஸ்ரீ திம்மராய பெருமாள் ஆலயமானது ஏரியூர், சுஞ்சல்நத்தம், பட்டக்காரன் புதூர்,  ஈச்சப்பாடி, பெல்லூர், அச்சம்பட்டி உள்ளிட்ட 12 ஊர்களுக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பழமையான ஆலயம் ஆகும். இந்த ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு, ஐந்து நிலை கோபுரமாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. 

இந்த ஆலயத்திற்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதற்காக கடந்த ஐந்து நாட்களாக ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய பெருமாள் ஆலயத்தில் 12 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சேலம் விஷ்ணு மகாலிங்க ஐயர் தலைமையிலான முப்பதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் 9கால யாக பூஜைகள் செய்தனர். 

அதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு தீர்த்த கலசங்கள் மேளதாளங்கள் வாணவேடிக்கைகள் உடன் புறப்பட்டு, ஒன்பது மணிக்கு ஆலய கோபுரத்தில் அமைந்துள்ள கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் இவ்வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை ஆலயங்களான விக்னேஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏரியூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேகத்தின்போது 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த மூன்று நாட்களாக முழுநேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies