விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அறுதியிட்ட நாளில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவராகவோ (அ) படித்துக்கொண்டிருப்பராகவோ இருக்க வேண்டும், 01.01.2023 அறுதியிட்ட நாளில் விண்ணப்பதாரரின் வயது 11-14 க்கு குறையாமலும், 13 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். (அதாவது 02.10.2010 முன்போ 01.07.2011-க் பின்னரோ பிறந்திருக்கக் கூடாது) உண்மையான பிறந்த தேதியினை மட்டுமே அளிக்க வேண்டும். பின்னர்மாற்றம் செய்ய கூடாது.
மேற்கண்ட தகுதித் தேர்விற்கான விண்ணப்ப படிவம், தகவல் கையேடு (Prospectus) மற்றும் முந்தைய வினாத்தாள்களின் நகல்கள் ஆகியவற்றை பெறுவதற்கு கட்டணமாக பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.600/-ம், SC/ST என்றால் சாதிச் சான்றிதழுடன் ரூ.555/- கட்டணம் செலுத்த வேண்டும்.
"THE COMMANDANT RIMC DEHRADUN", DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL BHAVAN, DEHRADUN, (Bank Code-01576), UTTARAKHAND என்ற பெயருக்கு வரைவோலையாக (Demand Draft) எடுத்து The Rashtriya Indian Military College, Garhi Cantt, Dehradun, Uttarakhand, PIN-248 003" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இராஷட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையளவழியான www.rimc.gov.in மூலமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு விரைவு அஞ்சல் வாயிலாக இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி. கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் 248 003-லிருந்து அனுப்பப்படும் )
அவ்வாறு அனுப்பும் பொழுது விண்ணப்பதாரரின் முழு முகவரி , பின்கோடு மற்றும் தொடர்பு கொள்ளத்தக்க கைபேசி எண்/தொலைபேசி எண். ஆகியவற்றை தெளிவாக கையினால் எழுத்தப்பட்ட அல்லது தட்டச்சு செய்யப்பட்ட (Typed/Written clearly in CAPITAL LETTERS with Pincode and contact number) கடிதத்தை வரைவோலையுடன் அனுப்பி தகுதித் தேர்வுக்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், விண்ணப்ப படிவத்துடன் 1) பிறப்புச் சான்றிதழ் (issued by Municipal Corporation / Gram Panchayat), 2) இருப்பிடச் சான்றிதழ், 3) SC/ST சான்றிதழ் 4) தற்போது படிக்கும் பள்ளி முதல்வரின் சான்றிதழ் (பள்ளி பதிவுகளின்படி) மற்றும் 5) விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை நகல் 6) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு 25.04.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை அதாவது www.rimc.gov.in பார்க்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகுதித் தேர்வுக்கான விண்ணப்பத்தினை மேற்கண்ட கல்லூரியில் மட்டுமே பெற்றுக்கொள்ளவேண்டும். நகல்கள் எடுக்கப்பட்ட விண்ணப்பங்களோ, உள்ளூரில் தயார் செய்யப்பட்ட விண்ணப்பங்களோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் எந்த காரணத்தை முன்னிட்டும் விண்ணப்பக் கட்டணம் திருப்பி தர மாட்டாது. எனவே, மேற்கண்ட தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தினை பெற்று 25.04.2022-க்குள் விண்ணப்பித்து பயன்பெற இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப. அவர்கள் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

