மகாபாரத பஞ்ச பாண்டவர்களை மையமாக கொண்டு, பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில் திரௌபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு திரௌபதி, தர்மர், பீமன், அர்ச்சுணன், நகுலன், சகாதேவன், கிருஷ்ணன், அபிமன்யூ, உள்ளிட்ட, 17 கடவுள்களின் சிலை உள்ளது. பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்துப்பெற்ற இக்கோவில், கூத்தப்பாடி, குள்ளாத்திரம்பட்டி, மடம், பொச்சாரம்பட்டி, அளேபுரம், அக்ரஹகரம், சின்னப்பநல்லூர் உள்ளிட்ட ஏழு ஊர்களுக்கு பொதுவானது. இந்நிலையில், இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. முன்னதாக கும்பலங்காரம், முதற்கால யாக பூஜை, திரவிய ஓமம், தீபாரதனை, சுக்ர ஓரையில் கோபுர கலசம் படிய வைத்தல், உள்ளிட்ட ஏரளமான பூஜைகள் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏழு கிராமத்தை சேர்ந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அங்கு வந்திருந்த அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
பென்னாகரம் டி.எஸ்.பி., சௌந்திராஜன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏழு ஊர் கவுண்டர்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இறுதியில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கட்டாமணிகவுண்டர் வைகுந்தம் அவர்கள் மகன் செந்தில் அவர்கள் நன்றி கூறினார்.
.gif)

