தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த க.ஈச்சம்பாடி காலனியில் ஊ .ஒ. தொ பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த ஏற்பாட்டை தமிழக அரசின் வழிகாட்டுதல்படி தலைமை ஆசிரியர் பூங்கொடி ஆசிரியர்கள் விஜயன் மற்றும் ஆதிமூலம் ஏற்பாடு செய்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி மன்ற தலைவர் திருமதி V. சாந்திவெள்ளையன் , ஊராட்சி வார்டு உறுப்பினர் ராசி.தமிழ் மற்றும் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர், விழாவில் பெற்றோர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பு செய்தனர்.
தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தலைவர் மற்றும் து.தலைவர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி உறுதி மொழி எடுக்கப்பட்டது. அனைவரையும் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.