இன்று காலை தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் மாவட்ட செயலாளர் திருமலைவாசன் ஆகியோர் தலைமையில் பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் உள்ள பாரத் பெட்ரோலியம் முன்பிருந்து துவங்கிய உலக தொழிலாளர் நினைவு நாள் பேரணியை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் துவக்கி வைத்தார், காவேரி ரோடு, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், முள்ளுவாடி, புதிய பேருந்து நிலையம், இந்திரா நகர் வழியாக வந்த பேரணி எட்டியாம்பட்டியில் நிறைவு பெற்றது.
முன்னதாக பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் சங்கத்தின் பெயர் பலகை அமைக்கப்பட்டிருந்தது, இதனை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்க நல வாரியத்தலைவர் பொன்குமார் அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்து கொடியேற்றினார்.
பிற்பகல் எட்டியாம்பட்டியில் உள்ள இ ஆர் மாணிக்கம் அரங்கில் தர்மபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் திருமலைவாசன் வரவேற்றுப் பேசினார்.
மாநிலத் துணைத் தலைவர் அழகேசன் பொது செயலாளர் செல்வம் இணை பொது செயலாளர் ஜெகதீசன் மாநில துணை தலைவர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.நிறைவாக சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் குழுவின் தலைவருமான பொன் குமார் அவர்கள் நிறைவு உரையாற்றினார்.

