முள்ளுவாடி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் சித்ரா தலைமை வகித்தார் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு செய்வதன் நோக்கம் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துகிறது மறுகட்டமைப்பு செய்வது குறித்து எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது குழுவின் தலைவராக நபிஷா சுல்தானா துணைத்தலைவராக தீபா உள்ளிட்ட 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அனைவரும் முகக்கவசம் அணிந்து பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினராக பெண்ணாகரம் பேரூராட்சி ஏழாவது வார்டு உறுப்பினர் மற்றும் 12வது வார்டு உறுப்பினர் கமலேசன் ஆகியோர் கலந்து கொண்டனர், அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.